News
5 பேர் நுவரெலியா நோக்கிச் சென்ற கார் இடையில் திடீரென தீப்பிடிப்பு – பயணித்தவர்களுக்கு சேதமில்லை
கினிகத்தேனை இன்று (20) காலை தியகல பிரதேசத்தில் பாணந்துறையிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
தீப்பரவல் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து முற்பகல் 11 மணிமுதல் சுமார் ஒரு மணிநேரம் முற்றாக நிறுத்தப்பட்டதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கினிகத்தேனை தியகல பிரதேசத்தில் 5 பேர் பயணித்த காரில் இன்று காலை 11 மணியளவில் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.
தீயை கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் கடுமையாக முயன்றும் கார் முற்றிலும் தீக்கிரையானது.