News

நாடு முழுதும் சுமார் 6000 சட்டவிரோத வாகனங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை கண்டறிய இணையதளம் அறிமுகமானது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 கார்கள் நாடு முழுவதிலும் பயன்பாட்டில் இருப்பது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய சுங்க வரியை செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த வாகனங்களில் அடையாளம் காணப்பட்ட வாகனங்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறான வாகனங்கள் விசாரணைக்காக ஆணைக்குழுவினால் கையகப்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைக்காகவும் சுங்க வரிகள் மற்றும் பிற கட்டணங்களை வசூலிப்பதற்காகவும் இலங்கை சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த வாகனங்களின் இரண்டாவது அல்லது அடுத்தடுத்த உரிமையாளர்கள் கடுமையான சிரமங்களையும், இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதையும் அவதானிக்க முடிந்தது.

அதன்படி, இவற்றிற்கு ஒரு தீர்வாக வாகனத்தை கொள்வனவு செய்யும் நபர் வாகனத்தை வாங்குவதற்கு முன்னர், இறக்குமதி வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் முறையாக செலுத்தப்பட்டதா என்பதை சரிபார்க்க, பொருத்தமான இணையவழி அணுகலை எளிதாக்குவதற்கு ஆணைக்குழு இலங்கை சுங்கத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அதன் பிரதிபலிப்பாக சுங்கத்துறை இணைய தளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதுடன் இதன் ஊடாக ஒருவர் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் வாகனம் சட்டபூர்வமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு சுங்க வரிகள் முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என்பதை சோதித்து பார்க்கும் சந்தர்ப்பம் காணப்படுகிறது.

அதன்படி, பின்வரும் இணைப்பைப் பார்வையிடுவதன் மூலம் உங்களுக்குச் சொந்தமான வாகனம் அல்லது வாங்க எதிர்பார்க்கப்படும் வாகனம் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியுமென இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://services.customs.gov.lk/vehicles

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button