News

அசோக றன்வல்ல அவர்களின் கருத்தானது மேலும் சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றது.

“அசோக றன்வல்ல அவர்களின் பட்டம் தொடர்பான ஆவணங்களை ஜப்பான் கல்வி நிறுவனத்திடமிருந்து பெற்றுகொடுப்பதற்கு அரசாங்கம் அவருக்கு உதவ முன்வரவேண்டும்.”

“அரசியல்வாதியாக இருப்பதற்கு அரசியலில் ஆர்வமும், தியாகமும் இருந்தாலே போதும். மாறாக எவ்வித கல்வித்தகமையும் தேவையில்லை”

“சபாநாயகர் பதவிக்கு கலாநிதிப் பட்டமோ அல்லது கல்வித்தகமையோ சட்ட ரீதியானதல்ல இங்கு இதுவல்ல பிரச்சினை”

இதற்கான அடிப்படை அனைத்து அரசியல்வாதிகளையும் பிழையாக காட்டியும், கள்வர் பட்டம் வழங்கியும் அனைத்து சிஸ்டத்தையும் மாற்றுவதற்காக தேசியமக்கள் சக்தியினர் தங்களை அதிதூய்மைவாதிகள் என நிறுவ முயன்றதனாலாகும்.

சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்த அசோக ரன்வல்ல அவர்கள் தனது கலாநிதி பட்டத்தை நிரூபிக்க இன்னும் சில காலம் தேவைப்படும் தனது பட்டம் தொடர்பான ஆவணங்கள் தற்போது கைவசம் இல்லாததால் உரிய கல்வி நிறுவனத்திலிருந்து பெற்று தனது பட்டத்தை நிரூபிப்பேன் என்று குறிப்பிட்டு மக்களுக்காக பதவி விலகியதாக குறிப்பிட்டும் இருந்தார்.

தற்போதய உலகமாயமாக்கலுக்கூடாக ஏற்பட்டுள்ள தொழிநுட்ப வளர்ச்சியில் சர்வேதச பல்கலைக் கழகங்களிலிருந்து பட்டப்படிப்பு தொடர்பான ஆவணங்களை, சான்றிதழ்களை பெறுவதென்பது கடினமானதொன்று கிடையாது மாறாக மிக விரைவாகவும், துள்ளியமாகவும் மிக இலகுவாக பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களும் சந்தர்ப்பங்களுமே இருக்கிறது. Online மூலமாக ஒரு நொடிப் பொழுதே இவ்வாறான ஆவணங்களை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம் என்று இருக்கும் போது அசோக றன்வல்ல அவர்களின் கருத்தானது மேலும் சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றது.

அதேநேரம் அசோக றன்வல்ல அவர்களுக்கு NPP அரசாங்கம் தனது முழு உதவிகளையும் வழங்கி ஜப்பான் பல்கலைக் கழகத்திலிருந்து அவரது பட்டச் சான்றிதழை பெற்று அவர்மீதும், NPP யின் மீதும் தற்போது பூசப்பட்டுள்ள சேற்றை அகற்றி தொடர்ந்து பயணிக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்காவிட்டால் இதே அரசாங்கம் அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பதவிவிலகச் செய்தும், கட்சி உறுப்பினர் அங்கத்துவத்திலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கவும் பின்நிற்கக் கூடாது என்பதுதான் NPP யின் அதிதூய்மைத்துவத்தை நிரூபிப்பதாக அமையும்.

இல்லை என்றால், இவ் விடயத்தை நிரூபிக்க தவறும் பட்சத்தில் NPP அனைவரும் இத்தவறை ஏற்றுக்கொண்டதாகவும் அல்லது அசோக றன்வல்ல அவ்வாறான பட்டமொன்றை பெற்றிருக்கவில்லை என்பதை முன்கூட்டியே NPP அறிந்துவைத்திருந்தது என்றாகிவிடும். இவ்வாறு நடந்தால் அசோக றன்வல்ல மாத்திரமல்ல முழு NPP யினரும் இத் தவறுக்காக மக்களால் குற்றம் சுமத்தவும்படுவார்கள்.

அதேநேரம் NPP க்கு வெளியலுள்ள பலரின் கலாநிதி பட்டங்களும் மக்கள் மன்றில் எதிர்வாதங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றது உதாரணமாக ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களும் இதற்குள் இழுத்துவிடப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் அரசியலின் பலவிடயங்களில் எமக்கு உடன்பாடு இருந்திருக்கவில்லை என்றாலும், அவ்வாறானவர்கள் தங்களது கல்வித் தகமைகளை காட்டி அதிதூய்மைவாதகளாக முன்வைத்து மக்களை தங்களது கல்வித் தகமைகளை முன்னிலைப்படுத்தி ஏமாற்றியிருக்கவில்லை.

ஆனால் NPP யானது தேர்தல் கோசங்களிலொன்றாக கற்றல் தகமைகளையும், பட்டங்களையும் மக்கள் மன்றில் முன்வைத்தும் ஏனைய அரசியல்வாதிகளின் கற்றல் தகமைகளை கேலிசெய்ததும் இங்கு ஞாபகப்படுத்த வேண்டிய விடயமாகும்.

MLM. சுஹைல்

NCOE.Dip.sp/A.L.political science

Teacher (Eravur Alighar National School)

Recent Articles

Back to top button