நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளது என்ற அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது….ஆனால் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.
⏩ நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளது என்ற அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது…
⏩ வங்குரோத்தான நாட்டை மீட்க கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது…
⏩ நாட்டின் நிகழ்ச்சி நிரலை அரசியலுக்காக அமைக்காமல், நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அரசியலை வடிவமைக்கும் யுகத்தை உருவாக்க வேண்டும்…
⏩ நான் எனக்காக வேலை செய்யவிலை, நாட்டிற்காக உழைக்கிறேன்…
⏩ ஐ.ம.ச யும் தே.வி.மு யும் எம்மைத் தடுக்கிறார்கள்…
- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
⏩ எங்களுக்கு எந்த நாளும் தொங்கு பாலத்தில் போக முடியாது…
⏩ மொட்டை உருவாக்கி உழைத்த மக்களை அலைய வைக்க முடியாது…
⏩ சவால்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை எங்கள் தலைவர்கள் தெரிவு செய்தனர்… (அமைச்சர் பிரசன்ன ரணதுங்க)
⏩ ரணில் விக்கிரமசிங்க போன்ற அனுபவமுள்ள மனிதரை அணுகி சஜித் பிரேமதாச மேலும் அரசியல் கற்றுக்கொள்ள வேண்டும்…
⏩ ஜனாதிபதிக்கு அரசியல் கட்சி கிடையாது. அவர் மக்கள் பக்கம் இருக்கிறார்…
⏩ இன்று நாட்டில் பணவீக்கம் 1% ஆக உள்ளது. இதை சொல்ல எதிர்க்கட்சிகளுக்கு முதுகெலும்பு இல்லை… (அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ)
⏩ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கினார்…
⏩ நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
(ஐ.தே.க. பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன)
⏩ அன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணிலுக்கு கைகுலுக்கி வாக்களித்தேன்…
⏩ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் ரணிலுக்கு கைகளை நீட்டி வாக்களிப்பேன்…
(இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த)
நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளது என்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (21) தெரிவித்தார்.
வங்குரோத்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சில மானியங்களை குறைக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இவ்வாறான கடினமான முடிவுகளை அவர் எடுக்காவிட்டால் நாடு மேலும் பாதாளத்தில் விழும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் நிகழ்ச்சி நிரலை அரசியல் நிர்ணயிப்பதை விடுத்து, அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அரசியலை உருவாக்கும் யுகம் உருவாக்கப்பட வேண்டும் என மேலும் குறிப்பிட்டார்.
கடவத்தை பேருந்து நிலையத்தில் (21) நடைபெற்ற “ஒன்றாக வெல்வோம் – நாம் கம்பஹா” பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 28 அமைச்சர்களும், 380 உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் இந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அங்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது:
பொருளாதாரம் இல்லாத நாட்டைத் தான் நான் பொறுப்பேற்றேன். அந்த அடிப்படைப் பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன் என்று சொல்கிறேன். என்னுடைய கட்சியில் இருந்தது நான் மட்டும்தான். நான் முதலில் ஐ.ம.சக்தியிடம் உதவி கேட்டேன். ஜே.வி.பி.யிடமும் கேட்டேன். அவர்கள் கைவிட்டனர். மொட்டுக் கட்சியிடம் ஆதரவு கேட்டேன். மொட்டுத் தலைவருடன் பேசினேன். அவர் என்னுடன் பேச விரும்பினார். அதன்படி, நான் மகிந்த ராஜபக்சவுடன் பேசினேன். அதற்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளோம் என்றார்.
நான் நாட்டைப் பொறுப்பேற்கும்போது, எனக்கு தங்குவதற்கு இடமில்லை. ஜனாதிபதி மாளிகையில் மக்கள் குழுமி இருந்தார்கள். வீடு தீப்பற்றி எரிந்தது. பின்னர் பிரதமர் அலுவலகத்தில் தினேஷ் கீழ் மாடியிலும் நான் மேல் மாடியிலும் இருந்தோம். இப்படித்தான் இரண்டு வாரங்கள் வேலை செய்தோம்.
நாடு வங்குரோத்து நிலைக்கு வந்து விட்டது என்று மகாவம்சத்தில் கூட சொல்லப்படவில்லை. வங்குரோத்தான நாட்டை மீட்க கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. சில நிவாரணங்கள் நீக்கப்பட்டன. அப்படியில்லை என்றால் நாடு மேலும் வீழ்ச்சியடையும். இதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்கவில்லை. நான் எனக்காக அல்ல நாட்டிற்காக உழைக்கிறேன். எஸ்.ஜே.பியும் ஜே.வி.பியும் எங்களைத் தடுத்தன. நாங்கள் எப்படியாயினும் பயணம் செய்தோம். இன்னும் சில நாட்களில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
நாம் வெற்றியடைந்த நாடுகளுக்குச் செல்ல வேண்டும். ஏழை மக்களை இந்த அரசு மறக்கவில்லை. சமுர்த்திக்கு பதிலாக அஸ்வெசும நலன்புரித் திட்டம் மூலம் மூன்று மடங்கு மானியம் வழங்கினோம். அரிசி வழங்கினோம். இப்போது நாட்டில் மருந்து இருக்கிறது. எரிபொருள் உள்ளது. 20 இலட்சம் குடும்பங்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயம் நவீனமயமாக்கப்பட்டு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த புரட்சியை நாம் செய்ய வேண்டும், நாட்டையும் மக்களையும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். ஒன்றிணைந்து முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டிய பொருளாதார மாற்றச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கல்வியை நவீனமயப்படுத்தியுள்ளோம். இளைஞர், யுவதிகளுக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் எல்லா இடங்களிலும் உள்ளது.
நான் இங்கு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட போது, சிலர் கலன்களைக் கழுவிக் கொண்டிருந்தனர். சிலர் பீடி சுற்றிக் கொண்டிருந்தார்கள். நான் அமைச்சராக இருந்தபோது இரண்டு சுதந்திர சந்தைகளை உருவாக்கினேன். மின் உற்பத்தி நிலையங்கள் கட்டப்பட்டன. இந்த அபிவிருத்தியை ஏன் ஏனைய மாகாணங்களில் நடைமுறைப்படுத்த முடியாது?
வெற்று நிலத்தை விட்டுச் செல்வது நல்லதல்ல. ஹம்பாந்தோட்டை, காலி, திருகோணமலை, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது.
அரசியல்வாதிகளால் நாட்டின் நிகழ்ச்சி நிரலை அமைக்க முடியாது. நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அரசியல் உருவாக வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதில் அர்த்தமில்லை. சஜித் மற்றும் அநுரவை எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைத்தோம். எல்லோரும் இணைந்து ஒன்றாக ஒரு பயணம் செல்வோம்.
பிரேமதாச கொல்லப்பட்ட போது திருமதி பண்டாரநாயக்கா ஜனாதிபதி அலுவலகத்திற்கு வந்தார். நீங்கள் வேட்பாளரை முன்வைப்பதை நாங்கள் எதிர்க்க மாட்டோம் என்று எங்களிடம் கூறினார். அடுத்த முறை வாய்ப்பைப் பெறுவோம் என்றார். அப்படித்தான் அரசியல் செய்தோம்.
நாம் நன்றாக வாழ எதிர்காலம் வேண்டும். இன்று எனக்கு அழைப்பு வந்தது. அதற்கு உரிய நேரத்தில் பதில் சொல்வேன்.
கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப்,
அநுரவின் மஹர கூட்டத்திற்கு 4,200 பேரும், சஜித்துக்கு 5,500 பேரும் வந்தனர். இந்தக் கூட்டத்திற்கு ஆட்களைத் தேடி நான் கிராமம் கிராமமாகச் சென்றபோது, அந்தக் கூட்டங்களை விட மேலும் ஒருவரை கூடுதலாக அழைத்து வருமாறு பிரசன்ன ரணதுங்க என்னிடம் கூறினார். ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒன்றுகூட்டிய மக்களை விட, குறைந்தது ஒருவரையாவது அதிகமாக அழைத்து வருவதாகக் கூறிய சவாலில் வெற்றிகொண்டு, 15,000 இற்கும் அதிகமான மக்கள் இன்று இங்கு வருகை தந்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து, போராட்டக்காரர்கள் என்று சொல்லப்படுபவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றியவர் நீங்கள். அன்று நாங்கள் எடுத்த முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது.
அனைவரும் ஒன்றிணைந்து சவால்களை முறியடிப்போம் என்பதை இந்த மேடையில் கூறி வருகிறோம். கம்பஹாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயணம் வெற்றியுடன் நிறுத்தப்படும்.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த,
இந்த நாட்டைப் பற்றி சிந்திக்கும், நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்திப்போர் இன்று எம்மோடு இருக்கின்றனர். பண்டாரநாயக்க எனது மாமனார். உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க எனது அத்தையாவார். அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த நான், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய சேவையை கருத்தில் கொண்டே நான் மிகக் கடினமான தீர்மானத்தை எடுத்தேன். பாராளுமன்றத்தில் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்கவுக்கு வாக்களித்த போது என் கைகள் நடுக்கம் கொண்டிருந்தன. ஆனால் இப்போது அவருக்கு கை நீட்டி வாக்களிப்பேன்.
அனுரகுமார திஸாநாயக்க கண்டிக்கு வந்து லொஹான் எங்கே என்று கேட்டார். “பிசாசுகளுக்கு பயந்தவர்கள் கல்லறையில் வீடுகளைக் கட்டுவதில்லை” என்று அவருக்கு சொல்ல விரும்புகிறேன். 88-89 காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி நாட்டுக்கு என்ன செய்தது என்பது சகலருக்கும் தெரியும். இன்று அக்கட்சியை ஆதரிக்கும் இளையோரை தவறாக வழிநடத்த வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். நாட்டை நேசிப்பவர்கள் நாட்டுக்கு பொருத்தமான தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே என்பதை அறிவர்.
நான் மஹிந்த ராஜபக்ஷவின் வலது கரமாக இருக்கிறேன். அவ்வாறு இருக்கின்ற போதும் அடுத்த தசாப்தத்தில் இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப கூடியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே என்பதை அறிந்தே அவருக்கு ஆதரவளிக்கிறேன். உங்களுக்காக சிறந்ததொரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதியின் வேலைத்திட்டதுடன் கைகோர்த்துக்கொள்ளுங்கள். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்த பின்னர் நாம் மீண்டும் கம்பஹாவில் தடம் பதிப்போம்” என்று தெரிவித்தார்.
சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண,
இன்று கம்பஹாவிற்கு வந்துள்ள மக்கள் வௌ்ளத்தைப் பார்க்கும் போது நாம் ஒன்றும் யோசிக்கத் தேவையில்லை. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு வருவார் என்பதில் சந்தேகமில்லை. கடவத்தை நகரம் நிரம்பி வழிகிறது. அண்மைக்கால வரலாற்றில் நாம் கண்ட மிகப்பெரிய மக்கள் வௌ்ளம் கடவத்தை நகரில் நிறைந்துள்ளது.
மங்கள சமரவீர தொலைபேசி புரட்சியை ஆரம்பித்தார். அப்போது அவர் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த காலம். இன்று நாட்டில் 30 மில்லியன் தொலைபேசிகள் உள்ளன. சுதந்திரத்தின் போது 3000 தொலைபேசிகள் இருந்தன. சுதந்திரம் கிடைத்தபோது எங்களுக்கு ஆயுள் 45 வருடங்கள். ஆனால் இப்பொழுது எங்கள் ஆயுள் வயது 80. அமெரிக்காவில் 79. 80 இலட்சம் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கார் மற்றும் தொலைபேசி உள்ளது. மகிந்த ராஜபக்ச இந்த நாட்டில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தினார்.
கோவிட் நெருக்கடி காரணமாக நாடு மூடப்பட்டது. நான்கு தடுப்பூசிகளுக்கும் செலுத்த அரசாங்கம் ஏற்பாடு செய்தது. மருத்துவமனைகள் மூடப்பட்டன. முடிந்தவரை பொருட்கள் வழங்கப்பட்டன. கோவிட் காரணமாக 16000 உயிர்கள் பலியாகியுள்ளன. ஆனால் அமெரிக்காவை விட இந்தியாவில் அதிக உயிர்கள் பலியாகியுள்ளன. கொரோனா நெருக்கடியிலும், மக்களுக்கு நிவாரணம் அளித்து மக்களைக் காக்க பாடுபட்டனர்.
கொரோனாவால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கு திரு.ரணில் விக்கிரமசிங்க துணிச்சலுடன் முன்வந்தார். இன்று முழு நிலையும் சீராகியுள்ளது. வெளிநாட்டு கையிருப்பு 6 பில்லியன் டொலருக்கும் அதிகமாக உள்ளது. யுத்தத்திலிருந்து நாட்டைப் பாதுகாத்த மகிந்த ராஜபக்ச அவர்களும் நினைவுகூரப்பட வேண்டிய ஒருவர். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொரோனாவிலிருந்து நாட்டை பாதுகாத்தார். ஆனால் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
முன்னாள் அமைச்சர் ருவான் விஜேவர்தன,
திரு.ரணில் விக்கிரமசிங்க இலங்கையை ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்திற்கு கொண்டு வந்துள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்யவும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அனைவரும் ஒன்றிணைந்தனர்.
ரணில் விக்கிரமசிங்க இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த சவாலை ஏற்கவில்லை என்றால், நாம் எங்கே இருப்போம் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது.
ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட போது பயந்து ஓடிவிடுவார் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் நம்பினர். ஆனால் அவர் சவால்களில் இருந்து ஓடுபவர் அல்ல.
ரணில் விக்கிரமசிங்க 22வது திருத்தத்தை கொண்டு வந்து தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சி கூறுகிறது. நாட்டைக் காப்பாற்றிய ஜனாதிபதி சட்டத்தை மீறி ஜனாதிபதித் தேர்தலை நடத்த எதற்கு பயப்பட வேண்டும்?
ரணில் விக்கிரமசிங்க நாட்டை ஸ்திரப்படுத்தியதால் தான் எதிர்க்கட்சியினர் சத்தம் இடுகின்றனர். சவால்களை ஏற்றுக்கொள்பவர்கள்தான் உண்மையான தலைவர்கள்.
திரு.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகி பெரும் பணக்கார வர்த்தகர்களை தனியார் துறைக்கு வரவழைத்து அவர்களின் தனிப்பட்ட சொத்துக்களை நாட்டிற்கு எரிபொருள் எரிவாயு கொண்டு வருமாறு கோரினார். அப்படித்தான் அவர் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார். அதன் கையிருப்பு டொலர் 6 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.
எனவேதான், நாட்டை வெற்றிபெற திரு.ரணில் விக்கிரமசிங்கவுடன் கைகோர்க்குமாறு SJB யில் உள்ள எனது நண்பர்களிடம் கூறுகின்றேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே.
ஒன்றிணைந்து வெல்வோம் கூட்டத்தொடரின் மூன்றாவது கூட்டம் இன்று கடவத்தையில் நடக்கிறது. காலியிலும், கண்டியிலுரும் இரு கூட்டங்களை நடத்தினோம். அந்த இரண்டு இடங்களையும் விட அதிகளவான ஆதரவாளர்களுடன் இன்று கூட்டம் நடக்கிறது. இவ்வாறதொரு அரசியல் கூட்டம் இலங்கையில் இதுவரை நடந்ததில்லை. இந்த கூட்டத்தில் பல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படும் பிரதிநிதிகளும் ஆதரவளார்களும் உள்ளனர்.
நாட்டை கட்டியெழுப்பும் சவால்களை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதியினால்தான் நாம் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளோம். இந்த பதவியை நீங்கள் பொறுப்பேற்ற போது, எங்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. அப்போது மத்திய வங்கியில் பணம் இல்லை. எங்கு பார்த்தாலும் எரிவாயு வரிசைகள், எரிபொருள் வரிசைகள். உங்களுக்கு இருந்த ஒரே நிபந்தனை நாடு உருவாவதுதான்.
நிபந்தனையின்றி நாட்டைக் பொறுப்பேற்று, இன்னும் பல ஆண்டுகள் ஆட்சி செய்யுங்கள். நாங்கள் நிபந்தனையின்றி ஆதரிக்கிறோம். அரசியல் செய்வதற்கு ஒரு நாடு வேண்டும். எதிர்காலத்தில், உங்களுக்காக ஒரு பெரிய மற்றும் பரந்த தளம் உருவாக்கப்படும். அன்று ஒரு வெளிநாட்டவர் கூட இந்த நாட்டுக்கு வரவில்லை. இப்போது கடலில் உள்ள தண்ணீரைப் பார்க்க முடியாத வெளிநாட்டவர்களால் கடற்கரை நிரம்பியுள்ளது. அதற்குரிய சூழலை உருவாக்கியவர் நீங்கள்.
சுற்றுலாத்துறை, காணி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,
குழந்தைகள் பிறக்க ஒன்பது மாதங்கள் ஆகும். ஆனால் ஒரு வாழ்க்கை நடனமாட ஒரே ஒரு நொடி மட்டுமே ஆகும். இலங்கை என்ற நாடு காணாமல் போகும் போது அதைக் காப்பாற்ற ஒரு முதுகுத்தண்டு கூட மனிதன் இல்லை. அன்று நாங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் போல் இருந்தோம். உணவு, எரிபொருள் இல்லாமல் மக்கள் வரிசையில் நிற்கும் போது பழைய அரசியலை செய்தால் நாங்கள் மனிதனாக இருக்க முடியாது.
நான் எஸ்.ஜே.பியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவன். எதிர்க்கட்சித் தலைவரின் வலது கரம் போல் இருந்த ஒருவர். கோட்டாபய ராஜபக்ச நாட்டை பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுத்தபோது சஜித் பிரேமதாச காலத்தை வீணாக்கி விட்டார். அமைச்சர்களின் வீடுகள் தீப்பற்றி எரியும் இந்த நேரத்தில், யார் பிரதமர் பதவியை பொறுப்பேற்பது? அந்த சவாலை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் நாட்டைப் பொறுபேற்கவில்லை என்றால் இப்படிப் பேச முடியாது.
கடந்த காலத்தை மிக விரைவாக மறந்து விடுகிறோம். சஜித் பிரேமதாச என்னை அனுபவம் வாய்ந்த ஒருவரின் அருகில் உட்காரச் சொன்னார். அதற்கு ரணில் விக்கிரமசிங்க சிறந்த நபர்.
ஆனால் இன்று ரணில் விக்ரமசிங்க எந்தக் கட்சியிலும் இல்லாமல், நாட்டு மக்களின் கட்சியில் இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். அவருக்கு கட்சி இல்லை. நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிக்காரர்களிடம் பரிசோதனைகளைச் செய்வதன் ஊடாக, மீண்டும் ஒரு முறை தவறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இது பரிசோதனைக்கான நேரம் அல்ல.
இன்றைய பணவீக்கம் 1%. இதைக் கூறும் முதுகெலும்பற்ற எதிர்க்கட்சிகள் இதைத் தான் அதிசயங்கள் என்கிறார்கள். சஜித் பிரேமதாச கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 150க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசியும், ஜனாதிபதித் தேர்தல் முடிந்து மூன்று வாரங்கள் வரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறான சவால்களுக்கு அஞ்சும் மனிதனிடம் எப்படி நாட்டை ஒப்படைக்க முடியும்?
பிரசன்ன ரணதுங்க, ஆளும் கட்சியின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க.
இன்று போன்ற ஒரு நாளில் தான் ரணில் விக்கிரமசிங்க சவால்களை ஏற்று ஜனாதிபதியாக வந்தார். அந்த நேரத்தில், எரிவாயு, எரிபொருள் இல்லை. மருந்து இல்லை. அப்படிப்பட்ட நேரத்தில் தான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டார்.
யுத்தம் கூட நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கவில்லை. ஆனால் 2022ல் சவாலான நேரத்தில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். எமது தலைவர்களின் சவாலை ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
கம்பஹா மக்கள் நாட்டின் மீது பற்று கொண்டவர்கள். நுகேகொடைக்கு மஹிந்த காற்றைக் கொண்டு வந்தபோது கம்பஹா மக்கள் எனக்கு சக்தியைக் கொடுத்தனர். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்கள் என நம்புகிறோம். கோட்டாபய ராஜபக்ச 365,000 மேலதிக வாக்குகளை கம்பஹாவில் பெற்று வெற்றி பெற்றார். இம்முறை உங்களை மேலதிக வாக்குகளினால் வெற்றி பெறச் செய்வோம்.
டி.எஸ்., டட்லி, பண்டாரநாயக்க, சந்திரிக்கா போன்றோர் நாட்டின் அரச தலைவராக விளங்கியவர்கள் போல், நீங்களும் அங்கிருந்து அரசியலை ஆரம்பித்தீர்கள். எனவே, அடுத்த ஜனாதிபதி கம்பஹாவில் இருந்து வருவார். நீங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும். இன்று நாம் தொங்கு பாலத்தில் செல்கிறோம். தொங்கு பாலம் ஆபத்து நிறைந்தது. அனுபவம் இல்லாதவர்கள் தொங்கு பாலத்தில் செல்ல முடியாது. அதனால் தான் மக்களுக்காக தொங்கு பாலத்தை கடந்தவர் நீங்கள். அதனால்தான் ஜனாதிபதித் தேர்தலுக்கு வருமாறு உங்களுக்குத் தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கப்படுகிறது.
மகிந்த ராஜபக்சவை நாட்டின் தலைவராக்க இந்த மக்களுடன் இணைந்து செயற்பட்டோம். அந்த மக்களை அலைய வைக்க முடியாது. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வேண்டும் என மும்மொழிகிறேன்.
(மக்கள் கைகளை உயர்த்தி ஆமோதிக்கிறார்கள்.)
இனி உங்களுக்கு தப்பிக்க முடியாது ஜனாதிபதி அவர்களே. எனவே அடுத்த வாரம் உங்களது முடிவை நாட்டுக்கு கொடுங்கள்.