News

சட்டவிரோத கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு #கொழும்பு

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சட்டவிரோத கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவரை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா உத்தரவிட்டார். 

பெண் ஒருவர் தனது கணவருக்குத் தெரியாமல் ஏழு வாரங்களுக்கும் மேலான கருவைக் கலைத்த குற்றச்சாட்டின் பேரில் தெமட்டகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கருவைக் கலைத்ததாகக் கூறப்படும் பெண் கொழும்பு 14 ஐச் சேர்ந்த அவரது கணவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இந்த வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது. 

கருக்கலைப்பு செய்ததாகக் கூறப்படும் மருத்துவர் ரூபா 30,500 அதற்காக பெற்றுள்ளதாக
நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

சந்தேகநபரான பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button