News
மணல் கடத்திய டிப்பர் வாகனத்தை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி கைப்பற்றிய பொலிஸார்

மணல் கடத்திய டிப்பர் வாகனம் ஒன்றைப் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளனர்.
நேற்று புதன்கிழமை யாழ். வடமராட்சி, வல்லிபுரம் பகுதியில் சட்டவிரோத முறையில் மணல் அகழ்ந்து கொண்டு தப்பிச் சென்ற டிப்பர் வாகனத்தைப் பருத்தித்துறை பொலிஸார் வல்லிபுரம் – ஆனைவிழுந்தன் வீதியில் வைத்து நிறுத்துமாறு பொலிஸார் கோரியபோது அது தப்பியோட முற்பட்டது. இதன்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி அதைக் கைப்பற்றினர்.
கடத்தக்காரர்கள் தப்பித்த நிலையில், டிப்பர் வாகனம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

