News
அஜர்பைஜானில் இருந்து ரஷ்யா நோக்கி, 72 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது

கஸகஸ்தானில் 67 பயணிகள் உள்பட 72 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது.
அஜர்பைஜானின் பாகுவில் இருந்து ரஷ்யாவுக்கு 72 பேரை ஏற்றிக்கொண்டு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. கஜகஸ்தானில் அக்டாவ் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது.
இவ்விபத்து ஏற்படுவதற்கு முன்னர் பலமுறை வானில் வட்டம் அடித்தது. விமானி நீண்ட நேரம் முயற்சி செய்தும் விபத்தை தவிர்க்க முடியவில்லை.
பயணிகள், விமானிகள் என மொத்தம் 72 பேருடன் சென்ற விமானம் கீழே விழுந்து தீப்பற்றி எரியும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



