News

“மலரும் 2025 ஆம் ஆண்டு, மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும், ஒடுக்குமுறைகளிலிருந்து சுதந்திரமடையும் வருடமாக அமையட்டும்” –  சமூக நீதிக் கட்சி

“மலரும் 2025 ஆம் ஆண்டு, மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும், ஒடுக்குமுறைகளிலிருந்து சுதந்திரமடையும் வருடமாக அமையட்டும்”

– சமூக நீதிக் கட்சி

மலரும் இந்தப் புத்தாண்டானது, ஒரு புறத்தில் மக்களால் உற்சாகமாக வானவேடிக்கைகளோடு வரவேற்கப்படும் அதே நேரம் இன்னுமொரு புறத்தில் வான்வழித் தாக்குதல்களின் அச்சத்தால் மறைவிடங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களாலும், பல்வேறுபட்ட மனித உரிமை மீறல்களுக்கும், ஒடுக்குமுறைகளும் உட்பட்டு வரும் உள்நாட்டு வெளிநாட்டு மக்களாலும் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் எதிர்கொள்ளப்படுகிறது.

மலரும் இவ்வருடம், உள்நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, கருத்துச் சுதந்திரத்திற்கும், அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் எதிராக பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தினை (PTA) இல்லாதொழித்தல், ஈஸ்ட்டர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மற்றும் அநியாயமாக கைது செய்யப்பட்ட மக்களுக்கான நீதி, கொவிட் ஜனாசா எரிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி என்பவற்றை போராடி அடைய வேண்டிய ஆண்டாக அமைந்துள்ளது.

சமூக நீதிக் கட்சியானது ஒடுக்குமுறைக்கு உட்படும் மக்களுக்காக குரல் கொடுக்கும், ஒடுக்குமுறைக்கு உட்படும் மக்களின் விடிவுக்காக உழைக்கும் கட்சி என்ற வகையில் மலரும் இப்புத்தாண்டானது உள்நாட்டில் மற்றும் உலகளாவிய ரீதியில் ஒடுக்கப்படும் மக்களுக்கு விடிவை கொண்டுவரும் வருடமாகவும், மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வருடமாகவும் அமைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வதோடு, அதற்கான உழைப்பைச் செலுத்தவும் உறுதி பூணுகிறது. அத்துடன் மக்களையும் அதற்காக ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றது.

01.01.2025.

#SocialJusticeParty #socialjustice

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button