முறைகேடான கணவனின் தாக்குதலில் அப்பாவி கணவர் உயிரிழப்பு – புத்தாண்டு தினத்தில் துயர சம்பவம் பதிவு

திருமணத்திற்குப் புறம்பான உறவு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் இன்று (01) உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பலாங்கொடை, மஸ்ஸன்ன, உடுமுல்ல பகுதியைச் சேர்ந்த (54) வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்த ஒருவர் கணவர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது.
இவ்வாறே இன்று (01) பிற்பகல் கணவர் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையும் முறைகேடான கணவனை தன் வீட்டில் கண்டுள்ளார்.
அப்போது வீட்டுக்காரருக்கும், மனைவியின் தகாத கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போது, தகாத கணவர் எனக் கூறப்படும் நபரை , கணவர் தாக்க முற்பட்டதாகவும், அப்போது கணவன் தாக்கப்பட்டு தரையில் விழுந்து உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அங்கு வந்த இரத்தினபுரி குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், பலாங்கொடை நீதவான் பாக்ய தில்ரக்ஷி விக்கிரமசிங்க நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.
சடலத்தை பிரேத பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



