News
நாட்டிற்குள் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள வர்த்தகரை அங்கொட மனநல மருத்துவ மனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு

இலங்கைக்கு தரமற்ற ஆன்டிபயடிக் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை இறக்குமதி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் சுதத் ஜானக பெர்னாண்டோவை அங்கொட மனநல சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக மாளிகாகந்த மேலதிக நீதவான் திருமதி நதீரா குமாரி போகஹதெனிய இன்று (01) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று சிறைச்சாலையால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை என்பதுடன், சந்தேகநபர் தொடர்பில் அங்கொட மனநல நிறுவகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை சிறைச்சாலையினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனை பரிசீலித்த மேலதிக நீதவான், குற்றஞ்சாட்டப்பட்டவரை மேலதிக மனநல சிகிச்சைக்காக அங்கொட மனநல மருத்துவ மனைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.



