News

தனியார் வங்கி ஒன்றுக்கு முன்பாக உரிமையாளரற்ற கார் ஒன்று காவல்துறையினரால் மீட்பு

பத்தரமுல்லை – தலாஹேன பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு முன்பாக உரிமையாளரற்ற கார் ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வங்கிக்கு முன்பாக கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை இன்று காலை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.

பின்னர், மதியம் வரையும் அந்த கார் அங்கிருந்து அகற்றப்படாததால் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், காவல்துறையினரும், காவல்துறை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து காரை சோதனையிட்ட போது அதில் போலி துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கார் குற்றச்செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டதா? என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button