News

அஷ்ரஃப் சிஹாப்தீனின் ‘சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்’ கவிதை நூல் வெளியீடு

பன்னூலாசிரியரும் ஒலி, ஒளிபரப்பாளருமான அஷ்ரப் சிஹாப்தீனின் ‘சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்’ கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு  07.07.2024- ஞாயிற்றுக் கிழமை பி.ப. 4.00 மணிக்கு கொழும்பு 09 தெமடகொட வீதி, வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் வகவம் தலைவர் கவிமணி என். நஜ்முல் ஹூஸைன் தலைமையில் வெற்றிகரமாக நடைப்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ எ.எச்.எம். பெளசி அவர்களும் விசேட அதிதியாக மீன்பிடித்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. அனுஷா கோகுல பெர்ணாண்டோ அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.முதற் பிரதியினை technical lead -OSOS Pvt .Ltd  ஜனாப்.மன்ஸூர் அப்துல்லாஹ் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

கௌரவ அதிதிகளாக எம்.எச்.எம். அன்ஸார் (மாஷா பில்டர்ஸ்), எம்.என்.எம், பிஷ்ருல் அமீன் (சட்டத்தரணி), மொஹமட் மில்ஹான் (ஜப்பான் லங்கா என்டர்பிரைஸஸ்), கவிஞர் நாச்சியாதீவு பர்வீன், ஆகியோர் பங்கு பற்றினர்.

வரவேற்புரையை கவிஞர் சிமாரா அலியும் வாழ்த்துரையை மாத்தளை எம்.எம். பீர்முகம்மது அவர்களும் வழங்கினர்.

நூல் பற்றிய உரைகளை எழுத்தாளர் பூர்ணிமா கருணாகரன், கவிஞர் எஸ்.ஏ.சி.பி. மரிக்கார் ஆகியோர் நிகழ்த்தினர். நிகழ்ச்சதி தொகுப்பு திருமதி ஆஷிகா பர்ஸான்

வெளியீட்டு நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இலங்கை நெய்னார் சமூகநலக் காப்பத்தின் தலைவர் இம்ரான் நெய்னார் சிறப்பாக செய்திருந்தார்.

முனீரா அபூபக்கர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button