News
காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற பிரபல வழக்கில், காதலி குற்றவாளி என தீர்ப்பு வெளியிடப்பட்டது.
கேரளாவில் இளைஞர் ஒருவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொல்லப்பட்ட வழக்கில் அந்த இளைஞரின் காதலி உட்பட மூவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
உயிரிழந்த குறித்த இளைஞர் அருந்திய குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் அந்த இளைஞனின் காதலி உட்பட மூவரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் ஏராளமான ரீல்ஸ் வீடியோக்கள் காட்சிகள், பதிவுகள், meme கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது
தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்குகளின் முடிவில் இன்றைய தினம் இவர்கள் மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான தண்டனை விபரம் நாளை வெளியிடப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.