ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகனம் தேவை ; தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தர்மபிரிய திஸாநாயக்க
ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகனம் தேவை என தேசிய மக்கள் சக்தி குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.தர்மபிரிய திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எம்.பி.க்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அது எந்த வகையான வாகனம் என்பது இதுவரை தெரியவில்லை எனவும் அவர் கூறுகிறார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கு வாகனம் தேவை என்பது நிராகரிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
மேலும், எம்.பி.க்களுக்கு புதிய வாகனம் வழங்கப்படும் என்று கூறிய அவர், இருப்புக்களில் உள்ள பழைய வாகனங்கள் அனைத்தையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என்றார்.
இருப்பு உள்ள வாகனங்களின் பல பாகங்கள் அகற்றப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை சரிசெய்து மீண்டும் பயன்படுத்தினால் அதிக பணம் செலவாகும் எனவும், நவீன வசதி வழங்க நடவடிக்கை எடுப்பது பொருத்தமானது எனவும் தெரிவித்தார்..
குருநாகல் இயந்திர அதிகார சபையின் ஆய்வுச் சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.