News
நண்பருடன் தங்கியிருந்த ஊடகவியலாளர் திடீரென மயங்கி சரிந்து விழுந்து உயிரிழப்பு.
முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என அழைக்கப்படும் அர்சசுதநாயர் சேகுவாரா நேற்று (25) காலமானார்.
யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் நண்பருடன் தங்கியிருந்த வேளை காலை நெஞ்சு வலிப்பதாக நண்பரிடம் கூறி சில நிமிடங்களில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.
மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவர், சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்தி எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும், கலைஞனாகவும் பல்துறைகளிலும் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-யாழ். நிருபர் பிரதீபன்-