இந்த அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை 20 வீதமாகக் குறைந்தமைக்கு கொழும்பு வர்த்தகர்கள் சார்பாகவும் கொழும்பு வாழ் மின் பாவனை வாடிக்கையாளர்கள் சார்பாகவும் அரசுக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்
(அஷ்ரப் ஏ சமத்)
இந்த அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை 20 வீதமாகக் குறைந்தமைக்கான கொழும்பு வர்த்தகர்கள் சார்பாகவும் கொழும்பு வாழ் மின் பாவனை வாடிக்கையாளர்கள் சார்பாகவும் அரசுக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். என வர்த்தக சங்கத் தலைவர் தில்சான் நாவலகே தெரிவித்தார்.
மேற்கண்டவாறு கொழும்பு எக்கமுத்து வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அமைப்பாளர் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பு இன்று (20) திங்கட்கிழமை புறக்கோட்டை குணசிங்கபுர யில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்றது.
வர்த்தக சங்கத் தலைவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
அரசாங்கம் மின்சாரப் பாவனையாளர்களுக்கு நிவாரணம் நூற்றுக்கு 20 வீத மின்சார கட்டணத்தை குறைத்தமைக்காக நாங்கள் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். புதிதாக பதவிக்கு வந்த அரசாங்கம் மின்சாரப் பாவனையாளர்களுக்கு நிவாரணம் 20 வீதத்தினை குறைந்தமையால் எங்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாகும். கொழும்பில் 24 மணித்தியாலமும் எங்கள் சிறிய கடைகள் வீடுகள் மின்சாரமின்றி வாழ முடியாது எங்களது வருமானத்தில் பாரிய தொகை மின்சாரக் கட்டணம் இருந்து வந்தது. அரசாங்கத்தின் மின் கட்டணக் குறைப்பு மக்கள் பாவனைப் பொருட்கள் குறைக்கப்பட வேண்டும். கடந்த கால அரசாங்கம் மின்சாரத்தை குறைப்பதற்காக எடுத்த முடிவிற்காக பொது பயன்பாட்டு ஆணையாளர் கூட வீட்டுக்கு அனுப்பியது. மக்கள் தொடர்ச்சியாக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 4 மாதங்களுக்குள் மக்கள் சிறுக சிறுக நிவாரணங்கள் கிடைத்து வருகின்றது. இதனையிட்டு நாங்கள் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் அல்ல ஒர் பொதுவாக ஊழியர் சங்கம். ஆகவே எதிர்கட்சியினர் ஊடகங்களில் வந்து அரசுக்கு எதிராக பிழையான தகவல்களை சொல்வி வருகின்றனர். சிலர் ஆர்ப்பாட்டங்களை நடாத்த முற்படுகின்றனர். இவைகளை மக்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். மின்சாரம் குறைக்கப்பட்டால் பாவனையாளர்கள் அதிகார சபை மின்சாரத்தினால் பாவிக்கப்படும் உற்பத்திகள் உணவூகள் பொருட்களுக்கு விலைகுறைப்புக்கு உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும் எனவும் தலைவர் தெரிவித்துள்ளார்
அத்துடன் இச்சங்கத்தில் 1800 பேர் பல்வேறுபட்ட வர்த்தகர்கள் தொழிலாளர்கள் அங்கம் வகிக்கின்றனர். என அமைப்பாளரும் அங்கு உரையாற்றினார்