இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 90,000 கோடி ரூபாய் கடன் உள்ளது… எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பேருவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சம்பூர் பிரதேசத்தில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
எமது அரசுலேயே டீசல் விலை 300 ரூபாவுக்கு கிழே சென்றது. ஆனால் ஒவ்வொரு மாதமும் டீசல் விலையை குறைக்க முடியாது. இலங்கை எரிபொருள் நிறுவனத்துக்கு 90,000 கோடி கடன் உள்ளது. ஒவ்வொரு லிட்டர் விற்பனையுடனும் கடன் செலுத்தப்படுகிறது.
கடனை செலுத்திய பின்னரே வரியை நீக்க வேண்டும்.
எம்மிடம் 99 எண்ணெய் டேங்கிகள் உள்ளன. நாம் 24 டேங்கர்களை எடுத்துக்கொண்டு ஐ.ஓ.சிக்கு 14 ஐ கொடுத்தோம், இன்னும் 61 டேங்கிகள் மிகுதியாக உள்ளது.. இந்திய நிறுவனத்துடன் இணைந்து அங்கு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை உருவாக்குவோம். எண்ணெயைச் சுத்திகரித்து இந்தக் கிடங்குகளில் சேமித்து அந்த எண்ணெயை உலகுக்கு விற்போம்.



