News
அரிசி கிலோவொன்றின் விலை 400 ரூபாவாக அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது ; தயாசிரி ஜயசேகர

இறக்குமதி செய்யப்படும் அரிசி கிலோவொன்றுக்கு அரசாங்கம் 75 ரூபாய் வரியை அறவிடுவதாகவும், எதிர்காலத்தில் அரிசி கிலோவொன்றின் விலை 400 ரூபாவாக அதிகரிப்பதை தடுக்க முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் நேற்று இரவு ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

