News
தெஹிவளை – கல்கிசை பகுதிகளில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து சுவர்களும் சிறுநீர் கழிப்பதால் சேதமடைந்துள்ளன.

தெஹிவளை – கல்கிசை பகுதிகளில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து சுவர்களும் மக்கள் சிறுநீர் கழிப்பதால் சேதமடைந்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தெஹிவளை- கல்கிசை பகுதியில் சரியான கழிப்பறை வசதிகள் இல்லாததால் மக்கள் சுவர்களில் சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையைத் தடுப்பதே தூய்மையான இலங்கைத் திட்டத்தின் நோக்கமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

