News
மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 32 வயது பெண், இன்று அதிகாலை பொலிஸ் சிறை கூடத்திற்குள்ளேயே உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பதிவு

மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வடபகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று (22) அதிகாலை பொலிஸ் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
32 வயதான குறித்த பெண் மருதானை பொலிஸாரால் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் பொலிஸ் சிறை கூடத்திற்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


