News
சஜித் அணியின் பலர் அடுத்து வரும் நாட்களில் ஜனாதிபதியுடன் இணையவுள்ளனர்..

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலரும் அடுத்து வரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளனர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
காலியில் நேற்று நடைபெற்ற ‘ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்’ கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றி பெறுவார் என்பது உறுதி. அவர் பின்னால்தான் அனைத்து கட்சிகளும் இன்றுள்ளன.
நெருக்கடியான நேரத்தில் நாட்டைப் பொறுப்பேற்காத சஜித் பிரேமதாஸ வெற்றி வேட்பாளரா? இல்லை. நாட்டை மீட்கக்கூடிய வேட்பாளர் எமது மேடையிலேயே இருக்கின்றார். அடுத்துவரும் நாட்களில் சஜித்தின் சகாக்களும் எமது மேடையில் ஏறுவார்கள் என்றார்.

