News

வாழ்த்துக்கள் சிங்கப் பெண்கள் 🇱🇰 வரலாற்றில் முதல் தடவையாக (இந்திய மகளிர் அணியை வீழ்த்தி ) ஆசிய சாம்பியன் ஆனது இலங்கை மகளிர் அணி

மகளிருக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

தம்புள்ளையில் இடம்பெற்ற குறித்த போட்டியில் இந்திய மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய மகளிர் அணியின் சார்பில் ஸ்மிருதி மந்தனா 60 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதற்கமைய 166 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை மகளிர் அணியின் சார்பில் ஹர்ஷிதா சமரவிக்ரம 69 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி ஆசியக் கிண்ணத்தைத் தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button