News
ஒரு அரிசி மணி கூட இல்லாத நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் நாட்டைக் பொறுப்பேற்றது.

நாட்டில் ஒரு அரிசி மணி கூட இல்லாத நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் நாட்டைக் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கங்களின் தவறுகளை இன்றும் அரசாங்கம் திருத்திக் கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் வகையில் பாரியளவிலான நிவாரணங்களை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தில் இணைந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

