News

சமூக நல்லிணக்கத்துக்கு வித்திட்ட மாற்றுவழி பிணக்கு தீர்வின் (ADR) மூலம் தம்பலகாமத்தின் இண நல்லிணக்க செயற்பாட்டை மேம்படுத்தும் களப் பயணம்

ஹஸ்பர் ஏ.எச்_

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன்  பிரிட்டிஷ் கவுன்சிலின் தலைமையில் சேர்ச் போர் கொமன்ட் (SFCG) ஆல் நாடளாவிய ரீதியில்  SEDR திட்டமானது செயற்படுத்தப்படுகின்றது  SFCG திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்கானது, இலங்கையில் இலக்கு வைக்கப்பட்ட ஆறு மாவட்டங்கள் மற்றும் பன்னிரண்டு பிரதேச செயலக  பிரிவுகளில் முரண்பாடுகளை  சாதகமான  முறையில் நிலைமாற்றம் செய்யவும்  மற்றும் வன்முறை அதிகரிப்பதைத் தடுக்கவும்  உள்ளூர் மட்ட மாற்றுவழி பிணக்கு தீர்வு வழிமுறைகளை (ADR மன்றங்களை)

வலுப்படுத்துதல்.

 இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் SFCG இணைந்து  விழுது ஆற்றல் மேம்பாடு மையம் இத் திட்டத்தை  நடைமுறைப்படுத்தி வருகிறது

இதன் தொடர்ச்சியாக தம்பலகாம பிரதேசம் பல் கலாசார பிரதேசதமாக காணப்படுவதால் தொடர்ச்சியாக இன நல்லிணக்கமின்மை செயற்பாடுகளுகள் அதிகரித்து வருவதால் இன  நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டில்  தம்பலகாமாம் ADR குழு செயற்பட்டு வருகிறது அந்த வகையில் 

இன்று (2025/02/06) திகதி மாற்றுவழி பிணக்கு தீர்வு குழுவினரின் ஏற்பாட்டில்     தம்பலகாம பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு சமயத்தவர்களின் வணகஸ்தலங்களின் கலை, கலாச்சார, பண்பாடுகள், மற்றும்  பழக்கவழக்கங்கள்  அவர்களுடைய இன நல்லிணக்கத்தை பாதிக்கும் செயற்பாடுகள் தொடர்பாகன விடயங்கள் என்பற்றை அறிந்து கொள்ள இன்றைய தினம்  முள்ளிப்பொத்தானை 96ல் அமைந்துள்ள ஸ்ரீ அக்ரபோதி பௌத்த விகாரை  , Our Lady of Perpetual Help Church, புஹாரி ஜூம்ஆ பள்ளிவாயல் , தம்பலகாமம் ஆதி கோணஸ்வர ஆலயம் என்பவற்றுக்கு 

பௌத்த ,இந்து, இஸ்லாமிய ,கிறிஸ்தவ மதத் தலைவர்களின் வழிகாட்டலின் கீழ் அனைத்து மத நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள்மற்றும் இளைஞர் யுவதிகள் தம்பலகாம ADR மன்ற குழுவினர்   ஒவ்வொரு சமூகத்தின் கலாசார விடயங்களை கற்று கொண்டதோடு இன  நல்லிணக்கத்தை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர். அத்தோடு எதிர்காலத்தில் அனைத்து சமய தலைவர்களையும் ஒன்றினைத்து தம்பலகாம பிரதேசத்தில் இன நல்லிணக்க குழுவை  உருவாக்குவதாக இதன் போது ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Hasfar A Haleem BSW (Hons)

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button