News
குருநாகல், தோரயாய பகுதியில் இன்று காலை இரு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி

குருநாகல், தோரயாய பகுதியில் இன்று (10) காலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 20 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
கந்துருவெலயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்திய போது, அதே திசையில் சென்ற மற்றொரு தனியார் பேருந்து, நின்று கொண்டிருந்த பஸ் இன் பின்புறம் மோதியதாலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

