News

LIVE VIDEO > 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பமானது .

நிதி அமைச்சர் என்ற வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்த நிலையில் அது தொடர்பான நேரலை ஆரம்பானது.

வரவு – செலவுத் திட்டம் தொடர்பான நேரடி தகவல்களுக்கு இந்த பக்கத்துடன் இணைந்திருங்கள்.

காலை 10.30 முதல், வரவு செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு) – நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் முன்வைக்கப்படும். 

வரவு செலவுத் திட்ட உரையின் பின்னர் பாராளுமன்ற அமர்வு பி.ப. 2.00 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும். 

அதன் பின்னர் பி.ப. 2.00 – பி.ப. 7.00 மணி வரை உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் – இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிகழ்த்தி வருகிறார்.

எமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டத்தை முன்வைப்பதில் மகிழ்ச்சி…

எமக்கு எதிராக தவறான பிரச்சாரங்கள் முன்வைக்கப்பட்டாலும் சர்வதேச தரப்பினருடன் வலுவான தொடர்புகளை பேணி முதலீட்டாளர்களுடன் நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும் நாம் வெற்றிப் பெற்றுள்ளோம்.

கடனை மீள செலுத்துவதற்கு 2028 ஆம் ஆண்டு வரை காலவகாசம் உள்ளது.இதனை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அத்துடன் கடன் செலுத்தும் தரப்படுத்தலை அதிரிக்க வேண்டும்.

2020 ஆம் ஆண்டில் பணவீக்கம் 70 சதவீதம் வரை அதிகரித்தது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தது…


“2025 ஆம் ஆண்டில் 5% பொருளாதார வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”

நெருக்கடியைக் குறைப்பதற்கான சில நடவடிக்கைகள், குறிப்பாக செலவின் அடிப்படையில் எரிசக்தி விலைகளை சரிசெய்தல், வரிகளும் வட்டி வீதங்களும் அதிகரிப்பது குடிமக்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் பங்கை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் நமது சொந்த பொருளாதார நிகழ்ச்சி நிரலை அமைக்க பொருளாதார இறையாண்மை அவசியம் என்பதை நாங்கள் உணர்கிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, ​​பொதுக் கடனை மறுசீரமைப்பதில் ஈடுபட்டிருந்தோம், அதை மாற்றுவது நாட்டை ஸ்திரமின்மைக்கு ஆளாக்கும் என்பதால் அதை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை….”

சம்பிரதாய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து வௌியேறி முன்னுரிமை இனங்காணப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்த வரவு செலவு திட்டம் இதுவாகும்.

தேசிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான வரவு செலவு திட்டமே இது. கைத்தொழிற்துறை , சேவை, விவசாயம் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும். அதற்காக பொது மக்களின் உதவிகள் அவசியம். அத்தியாவசிய பொருட்கள் சேவையை சாதாரண விலைக்கும் தரமாகவும் தொடர்ந்து வழங்க முறைமையொன்று.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு வரலாற்றில் முதன்முறையாக அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“வரையறுக்கப்பட்ட வரி நிதிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க முறைமை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.”

“பொருளாதாரத்தில் அதிக ஜனநாயகமயமாக்கல் தேவை.”

“பொருளாதாரத்தின் அனைத்து நன்மைகளும் பொருளாதார செயல்முறைக்கு பங்களிக்கப்படுகின்றன.”

“உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வரவு செலவு திட்டம்.”

“நிதி ஒழுக்கம் மற்றும் பொருளாதார தொலைநோக்குப் பார்வையுடன் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டம்.”

“ஊழல் மற்றும் விரயத்தை குறைத்து, கூட்டு ஒழுக்கத்தின் மூலம் ஒரு புதிய பயணத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் முறைமை ஒன்றை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.”

“மக்களின் பொருளாதார உரிமைகளை உறுதி செய்வதே இந்த வரவு செலவு திட்டத்தின் தத்துவம்”

*தற்போது உள்ள சுங்க சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு புதிய சுங்க சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.”

* வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை வணிக ஒத்துழைப்புக்குப் பயன்படுத்தவுள்ளோம்.”

* முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதிகளை வழங்குதல்

* பசுமை தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த நடவடிக்கை.

* பொருளாதார சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை.

*அரசுக்குச் சொந்தமான நிலங்கள் உற்பத்தி பொருளாதார நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு விடப்படும்.

* நாட்டில் வர்த்தகம் செய்வதற்கான வசதியை மேம்படுத்துவோம்.

* வங்குரோத்து நிலை குறித்த சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்..

* பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்கான ஒப்புதல்களுடன் ‘அனைத்து சேவைகளும் ஒரே இடத்திலிருந்து’ என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டு வருகிறது.

* பொது-தனியார் கூட்டாண்மை தொடர்பான புதிய சட்டம்.

*நில உரிமைகளை மேம்படுத்தவும், நிலங்களின் வணிகமயமாக்கலை அதிகரிக்கவும் ‘பிம் சவிய’ வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படும்.

*இலங்கையின் கனிம வள முதலீடு, தொழில்துறை அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி ஆகிய துறைகளில் இலங்கையின் பயன்படுத்தப்படாத திறனை நிர்வகிக்க அரசாங்கம் வெளிநாட்டு நேரடி முதலீட்டை நாடுகிறது.

*தர ஆய்வு மற்றும் சான்றிதழ் செயல்முறைக்குத் தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி ஆதரவை அரசாங்கம் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்குகிறது.

*வெளிநாட்டு வருமானம் மற்றும் ஈவுத்தொகையை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கான ஒரு புதிய முறை.

*சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வக பரிந்துரை மையங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிற மதிப்பீட்டு நிறுவனங்களுக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை திறம்பட வழங்குவதற்காக, நாட்டில் தேசிய முகாமைத்துவ தரவு அமைப்பின் விரும்பிய முடிவுகளை அடைய 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

*டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த 3,000 மில்லியன் ஒதுக்கீடு.

  • சுற்றுலாத் துறைக்கு டிஜிட்டல் டிக்கெட் வழங்கும் முறை தொடங்கப்படும்.
  • சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக ஐநூறு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
  • பண்டாரநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் ஜப்பானின் உதவியுடன் ஆரம்பிக்கப்படும்.
  • அனுராதபுரம் மற்றும் யாபஹுவ போன்ற புதிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்படும்.
  • புதிய கண்டுபிடிப்புகளின் ஆராய்ச்சி மற்றும் வணிகமயமாக்கலுக்கு ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
  • ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொது வளங்களை மக்கள் பாவனைக்கு திறம்பட பயன்படுத்துவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
  • அதிக செலவாகும் அனைத்து அரச சொகுசு வாகனங்களும் மார்ச் மாதம் ஏலத்தில் விடப்படும்.
  • *பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன ‘Permit’ ம் கிடைக்காது…
  • இந்த வருடம் வாகனமும் கிடைக்காது…

*இடம்பெயர்ந்த சிறுவர்களுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான வீட்டை நிர்மாணிக்க ஒரு மில்லியன் ரூபாய்.

  • இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான வீட்டைக் கட்ட ஒரு மில்லியன் ரூபாய்.

    தடுப்பு மையங்கள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 5,000.

    அனாதைகளுக்கான சமூகப் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது.

    நன்னடத்தை காலத்தில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக ஐநூறு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

    சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை 7,500-லிருந்து பத்தாயிரமாக உயர்த்தப்படும்
  • இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.250,000 லிருந்து ரூ.1 மில்லியனாக உயர்த்தப்படும்
  • பேரிடர் இழப்பீட்டுத் தொகை ஒரு மில்லியன் ரூபாய்.

    பேரிடர்களால் சேதமடைந்த சொத்துகளுக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் இழப்பீடு
  • வெளிநாடு சென்று திரும்பும் இலங்கையர்களுக்கு விமான நிலைய வரியில்லா வரம்பு உயர்த்தப்படும்.
  • போதை இல்லாத சமூகம் வேலைத்திட்டத்து ஐநூறு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்..

    *அதில் 2,000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும்… மீதி 3,000 ரூபாய் அவர்களில் சட்டரீதியான பாதுகாவலருக்கு வழங்கப்படும்…

    *இதற்காக 2025 வரவு செலவு திட்டத்தில் 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு….
  • அனைத்து மக்களும் இணைந்து மகிழும் வகையில் கலாசார விழா நடத்தப்படும்
  • கிழக்கு மாகாணம் பொருளாதார அபிவிருத்திக்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்படும்
  • குற்ற வருமானம்  தொடர்பான சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்படும்.

    குற்ற வருமானம் மீதான சட்டங்களை மறுபரிசீலனை செய்து மீண்டும் அமலாக்கப்படும்
  • இலங்கை தினம்” என்ற தேசிய விழாவை நடத்துவதற்கான திட்டங்கள். அதற்காக, ரூ. 300 மில்லியன் ஒதுக்கப்படும்
  • யானை – மனித மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக ரூ.240 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது
  • தூய்மையான இலங்கை திட்டத்துக்கு 5000 மில்லியன் ரூபாய்.  தூய்மையான இலங்கை திட்டத்தை அரசியல் கோணத்தில் பார்க்க வேண்டாம்.
  • பொதுத் துறையில் முப்பதாயிரம் அத்தியாவசிய காலிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. அதற்காக பத்தாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்

அரசியல்  அடிப்படையில் எவரும் அரச சேவைக்கு நியமிக்கப்படுவதில்லை

பொது சேவையில் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப 10,000 மில்லியன் ரூபாய்
இந்த ஆண்டு முதல் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொது சேவைப் பணிகளில் 30,000 நபர்களை பணியமர்த்துவதற்கான ஒரு மூலோபாய ஆட்சேர்ப்புத் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தும்

கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்காக நூற்றெட்டு அலகுகள் கட்டப்படும். மிக விரைவில் கட்டப்படும்

அரச ஊழியர்களின் சம்பளம், 15,750 ரூபாவினால் அதிகரிக்க வரவு- செலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் 24,250 ரூபாவில் இருந்து 40,000 வரை 15,750 ரூபாவால் அதிகரிக்கப்படும்…

வருடாந்த சம்பள அதிகரிப்பு 60 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது

( உரை தொடர்கிறது …

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button