News
பல துறைகளிலும் சாதிப்பவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 1000 முக்கியஸ்தர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கும் சாதனை ஒன்றை ஆரம்பித்துள்ள கலாபூஷணம் பரீட் இக்பால்

1000 முக்கியஸ்தர்களை கெளரவித்து பொன்னாடை அணிவிக்கும் சாதனை
இன்று எமது நாட்டில் கல்வி, விளையாட்டு, கலை, கலாசாரம் போன்றவற்றில் சாதிக்கிறார்கள். தொடர்ந்தும் சாதிக்க வேண்டுமாகவிருந்தால் நாம் அவர்களை ஊக்குவித்து பாராட்ட வேண்டும். இந்த நல்ல நோக்கத்தில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்க வேண்டும். இந்த நல்ல நோக்கத்தில் 1000 முக்கியஸ்தர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கும் சாதனை ஒன்றை ஆரம்பித்துள்ளார் கலாபூஷணம் பரீட் இக்பால். உலகில் பலர் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்த காலகட்டத்தில் இவரது சாதனையும் வெற்றியளிக்க வாழ்த்துக்கள்.
*யாழ் முஸ்லிம் சமூக ஊடகம்*


