கனேமுல்ல சஞ்சீவ கம்பஹா நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்படுவார் என்ற தகவல் முன்னரே கிடைத்திருந்தது ; பதில் பொலிஸ்மா அதிபரின் விசேட தகவல்

கனேமுல்ல சஞ்சீவ கம்பஹா நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்படுவார் என்ற தகவல் முன்னர் கிடைத்திருந்ததாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு முன்னர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் கனேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்ய முயற்சிப்பது குறித்து தகவல் கிடைத்ததாக பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கனேமுல்ல சஞ்சீவ கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கம்பஹா பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்குத் தகவல் அளித்து, கனேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சாட்சியங்களின் தொழில்நுட்பம் ஊடாக விசாரணையை நடத்துமாறு நீதவானிடம் தெரிவித்ததாகவும் பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்தார்

