News
20 லட்சத்திற்கு ஆட்டோ வாங்கினால் “அபி மாலிமாவட” ஸ்டிக்கர் இலவசம் ..

பன்னிரெண்டு இலட்சம் ரூபாவிற்கு Vitz காரை வழங்க வந்த அரசாங்கம் முச்சக்கர வண்டி ஒன்றின் விலையை இருபது இலட்சம் ரூபாவாக உயர்த்தியுள்ளதாக சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகின்றார்.
அவ்வளவு பணத்திற்கு முச்சக்கர வண்டி வாங்கும் நபருக்கு ‘நாம் திசைக்காட்டிக்கு’ என்ற ஸ்டிக்கர் இலவசம் என்றும் அவர் கூறினார்.
அன்று சொன்ன எதையும் இன்றைய அரசாங்கத்தால் செய்ய முடியாமல் போய்விட்டது என்று நாட்டின் சாமானிய மக்கள் கூட கூறுவதாகவும் அவர் கூறுகிறார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

