இரண்டாவது போட்டியிலும் தோற்று ICC சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் பரிதாப நிலையை அடைந்தது பாகிஸ்தான்

ICC சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இன்றைய போட்டி பாக்கிஸ்தான் அணிக்கு மிகவும் தீர்க்கமான ஒன்றாக காணப்பட்டது.. கடந்த போட்டியில் நியூசிலாந்து அணியுடன் தோற்ற காரணத்தால், செமி பைனல் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த போட்டியில் வென்றே ஆக வேண்டிய சூழ்நிலையிலேயே இந்தப் போட்டி இடம்பெற்றது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. சவுத் ஷகீல் (Saud Shakeel) 62 (76) ஓட்டங்களும், முகமது ரிஸ்வான் 46 (77) ஓட்டங்களும் எடுத்தனர்.
குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, அக்ஷர் மற்றும் ராணா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
50 ஓவரில் 242 என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையடிய இந்திய அணி 42 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. விராத் கோஹ்லி 100 ஓட்டங்கள் பெற்றார். ஏற்கனவே கடந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதால் அவர்களின் செமி பைனல் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது. பாக்கிஸ்தான் அணியின் செமி பைனல் வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லாமலே சென்று விட்டது.

