ஜனாதிபதி எவ்வாறு வெறும் 1.8 மில்லியன் ரூபாய் செலவில் மூன்று நாடுகளுக்கு பயணம் செய்தார்? அவர் புட் போடில் (மிதி பலகையில்) பயணம் செய்தாறா? பாராளுமன்றில் திலீத் ஜயவீர கேள்வி

பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணச் செலவுகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் நம்பக் கூடியதாக இல்லை என தாம் சவால் விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர கூறினார்.
ஜனாதிபதியின் பயணச் செலவுகள் மிகக் குறைவாக உள்ளது என வகையில் இன்று பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களுக்கு பதிலளித்த திலீத் ஜெயவீர, ஜனாதிபதி வெறும் 1.8 மில்லியன் ரூபாயில் மூன்று நாடுகளுக்கு எவ்வாறு விஜயம் செய்ய முடிந்தது என்று கேள்வி எழுப்பினார்.
“வெளிநாட்டு பயணச் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறுகிறார். இவ்வளவு குறைந்த தொகையில் மூன்று நாடுகளுக்கு அவர் எப்படி பயணம் செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை – அவர் புட் போடில் (மிதி பலகையில்) பயணம் செய்தாறா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த ஐந்து மாத காலப் பதவிக்காலத்தில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்தார்.
செலவுகளைக் குறைப்பது மட்டும் லாபத்தை ஈட்டித் தராது என்று கூறிய ஜெயவீர, வருவாய் ஈட்டுவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“பட்ஜெட் பற்றாக்குறையை எவ்வாறு சமன் செய்வது? எங்கள் கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது? நாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது” என்று திலீத் எம்.பி. கேள்வி எழுப்பினார்

