இஸ்திஹார் அவர்களது முயற்சியில் 3,500,000 ரூபா செலவில் கசாவத்தை வித்தியாலயத்தில் தொழில்நுட்ப்ப வகுப்பறை(Digital Smart Clasroom)
“அக்குறணை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இஸ்திஹார் அவர்களது முயற்சியில் 3,500,000 ரூபா செலவில் அக்குறணை கசாவத்தை வித்தியாலயத்தில் நிர்மாணிக்கபட இருக்கும் அனைத்து வசதிகளும் கூடிய தொழில்நுட்ப வகுப்பறைக்கான அடிக்கல் நாட்டும் விழா சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.”
ஜனாதிபதி செயலகத்தினால் நேரடியாக ஒதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின்” ஊடாக அபிவிருத்திப் பணிகள் நடைபெறுவதோடு அக்குறணை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இஸ்திஹார் அவர்களின் முயற்சி, மற்றும் வேண்டுகோளுக்கிணங்க இவ் வேலைத்திட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த முன்னாள் தலைவர் அவர்கள், “சிறுவர்களுக்கு கல்வி புகட்டுவது மட்டுமல்லாமல் கல்வி கற்க கூடிய முறையான சூழலை உருவாக்கி கொடுப்பதும் எமது பொறுப்பாகும். எமது தொடர்ச்சியான அபிவிருத்தி திட்டங்களுடன் எதிர்வரும் காலங்களில் கண்டி மாவட்டம் முழுவதும் உள்ள பாடசாலைகளில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.
பாடசாலை வளங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நடைபபெற்று வரும் வேலை திட்டத்தில் அக்குறணை பிரதேசத்திற்கான 7 வது கட்ட வேலைத் திட்டமாக இந்த கசாவத்தை வகுப்பறை நிர்மாணிப்பு திட்டம் அமையும்”என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.