News

உள்ளூராட்சி தேர்தல் வருகிறது ! கூடவே கல்முனை விடயமும் வருகிறது !!

முகா – கூட்டமைப்பு எம்பீக்களை நம்பாதீர் ; ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் அறைகூவல்..

தேர்தல் ஒன்று வரும்போது மட்டும்தான் கல்முனை பிரதேச செயலக விவகாரத்தை தூக்கிப் பிடிப்பார்கள்.

ஹக்கீமும் கோடீஸ்வரனும் பாராளுமன்றத்தில் முழங்கியது மக்களை ஏமாற்றும் முயற்சி என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. யஹியாகான் சூளுரைத்துள்ளார்.

தமிழ் – முஸ்லிம் சுகத்தை குழப்புவதே இவ்வாறானவர்கள் தான். இரண்டு சுகங்களும் இந்த விடயத்தில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.

இரண்டு தரப்பினரும் பேசி வைத்தது போன்று – உள்ளூராட்சி தேர்தலில் கூதல் காய் எடுக்கும் முயற்சிகளை முறியடிப்போம்.

கல்முனை பிரதேச செயலக விவகாரத்தை தமிழ் – முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு தீர்த்துக் கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். எமது ஒற்றுமையை சீர்குலைக்க இவ்வாறான ஓர் எடுக்கும் முயற்சிகளுக்கு இனியும் இடம் வழங்கக் கூடாது.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியாளர்களுடன் இணைந்து – தமிழ் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்கள், கோயில்களின் பிரமுகர்கள் ஒன்றுபட்டு இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றும் யஹியாகான் சுட்டிக்காட்டி உள்ளார்.

Recent Articles

Back to top button