News
VIDEO > சஜித்தின் சமகி ஜன பலவேகய உறுப்பினர் ஜனாதிபதி ரணில் தலைமையில் செயலமர்வு நடந்த இடத்தில் இருந்து ஊடகவியலாளர்களிடம் சிக்கிக்கொண்ட சம்பவம்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு இடம்பெற்றிருந்த பத்தரமுலவில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் கட்டிடத்தில் இருந்து சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள வெளியே வந்தபோது ஊடகவியலாளர்கள் அவரை சூழ்ந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலமர்வுக்கா சென்றீர்கள் என கேட்ட போது தான் இந்த கட்டிடத்தில் இடம்பெறும் NDI நிகழ்வில் கலந்து கொள்ளவே தான் வந்ததாக தெரிவித்தார் .. ஆனால் தனக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நீண்டகால பழக்கம் உள்ளது என தெரிவித்த அவர் .., சமகி ஜன பலவேகய (SJB) உறுப்பினராக இருந்தும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் வெல்வார் என தெரிவிக்காமல் சஜித் அல்லது ரணில் வெல்வார் என மழுப்பலாக பதில் அளித்தார். VIDEO

