News

மேகம் வெடித்து கனமழை கொட்டியதில் 3 பேர் உயிரிழந்து 50 பேரை காணவில்லை #இந்தியா

ஹிமாச்சல பிரதேசம் மற்றும் அதன் அண்டை மாநிலமான உத்தரகாண்டில் மேகவெடிப்பு ஏற்பட்டு, கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் 3 பேர் உயிரிழந்து 50 பேரை காணவில்லை.



தெஹ்ரி மாவட்டம் ஞானசாலியில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.



இதேபோல், ஹிமாச்சல் சிம்லா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ராம்பூர் பகுதியைச் சேர்ந்த 36 பேர்  நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கடும் மழைக்கு மத்தியில், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ராம்பூர் துணை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button