News
இலங்கையின் கடவுச்சீட்டு சென்ற வருடம் உலக அளவில் 96 ஆம் இடத்தில் இருந்த நிலையில் இவ்வருடம் 91 ஆம் இடத்திற்கு வந்தது.

உலகின் பலவீனமான கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை முன்னணிக்கு வந்துள்ளது.
வீசா இல்லாத பயணத்தை அனுமதிக்கும் நாடுகளில் சென்ற வருடம் 96 ஆம் இடத்தை இலங்கை பிடித்திருந்தது.
இந்நிலையில் இந்த பட்டியலில் இலங்கை 91வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. சூடான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் அந்த இடத்தில் உள்ளன.
வீசா இல்லாத பயணத்தை அனுமதிக்கும் நாடுகளில், சிங்கப்பூரின் கடவுச்சீட்டு மிகவும் மதிப்புமிக்கதாக மாறியுள்ளது.
சிறந்த கடவுச்சீட்டு பட்டியலில் ஜப்பான் மற்றும் தென் கொரியா இரண்டாவது இடத்தில் உள்ளன.
சிறந்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளில் டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
முழு விபரம் https://www.henleyglobal.com/passport-index/ranking

