News
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது

பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, இன்று (மார்ச் 06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.
தென்னகோனைக் கண்டுபிடிப்பதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) பொறுப்பேற்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உரிய தகவல்களை அறிந்தவர்கள் உடனடியாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்குமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர். (

