பெராரி லைசன் பெற்ற நபர் அல் ஜசீரா மீது மோதியதால் பாரிய சேதம் ஏற்பட்டு மூளையும் பாதிப்படைந்துள்ளது என்ற துயர சம்பவத்தை தெரிவித்து என் உரையாடலை ஆரம்பிக்கிறேன்..

இன்றைய எமது உரையாடலை மிகவும் துக்கத்துடன் தான் ஆரம்பிக்க வேண்டி உள்ளது… என்னவென்றால் அண்மையில் இடம்பெற்ற வீதி விபத்தை பற்றி தெரிவிக்க வேண்டும். “பெராரி லைசன் பெற்ற நபர் அல் ஜசீரா மீது மோதியதால் பாரிய சேதம் ஏற்பட்டு மூளையும் பாதிப்படைந்துள்ளது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் என்ற முறையில் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய அல்ஜசீரா நேர்காணலை அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றில் இன்று கிண்டலுடன் சொல்லி உள்ளார்.
எனக்கு சில அனுபவங்கள் உள்ளது.. சாரதி பயிற்சிக்கு வராத ஒருத்தரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கும். பெராரி கார் காரரும் அப்படி ஒருத்தர் தான்.
ரணில் விக்கிரமசிங்க என்பவர் திறமையானவர் என்றே எங்களுக்கு சொல்லப் பட்டது.. இப்போது பார்த்தால் அல் ஜசீராவுடன் மோதி உடைந்து போய்விட்டது.
அதுபோன்ற வகையான சாரதிகள் எங்கள் நாட்டில் உள்ளார்கள் ரணில் விக்கிரமசிங்க மாதிரி பெராரி வகை – நாங்கள் ஒரு நல்ல சாரதி பயிற்சி நிலையத்தை ஆரம்பித்து இவர்களுக்கு பயிற்சி வழங்கும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் பிமல் ரத்னாயக்க மேலும் தெரிவித்தார்

