News

இரவுநேர களியாட்ட விடுதி ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் (7 பேர் கொண்ட குழு) தாக்குதல் நடத்தியது #இலங்கை

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதி ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த 7 பேர் கொண்ட குழு ஒன்று அங்கு இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் இரவுநேர களியாட்ட விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களையும் உடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button