News
ஆட்சியை நீண்ட காலத்திற்கு கவிழ்க்க முடியாது.. திசைகாட்டியின் ஆட்சி தொடரும் !

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னொரு காலகட்டத்திற்கு அசைக்கக் கூடிய அரசாங்கமல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் திரு டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அசைக்க முடியாது என்பதை அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்று காட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் பலம் குறைந்துள்ளதாக தோற்கடிக்கப்பட்ட சில அரசியல்வாதிகள் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



