Site icon Madawala News

கொழும்பில் இம்மாதம் 21 முதல் 31 வரை சிறப்பாக நடைபெற உள்ள தேசிய ரமலான் பண்டிகை வாரம்

அஷ்ரப் ஏ சமட்

தேசிய ரமலான் பண்டிகை வாரம் சிறப்பாக கொழும்பில் 2025 மார்ச் 21 முதல் 31 வரை நடைபெற உள்ளது.


இன்றைய சமூகத்தில் ஓரளவு பின்தங்கியிருக்கும் மரபுகள் கலை கலாச்சாரங்கள் வெளிப்படுத்தும் சமூக நோக்கத்துடனும், முழு உலகிற்கும் தேசிய ஒற்றுமையை நிரூபிக்கும் நோக்கத்துடனும் இந்த ஆண்டு தேசிய ரமழான் பண்டிகையை “சலாம் ரமழான்” என்ற தொனிப்பொருளில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

2025 மார்ச் 21 முதல் 31 வரை கலாச்சார விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேல் மாகாண சபையால் நியமிக்கப்பட்ட தேசிய ரமலான் விழாக் குழு இதை திட்டமிட்டுள்ளது டன், 2025 மார்ச் 21 முதல் 31 வரை 10 நாட்களுக்கு கொழும்பு நகரத்தை மின் விளக்குகளால் ஒளிரச் செய்யவும், இந்த தேசிய விழாவுடன் இணைந்து கொழம்பில் கிரீன் பாத் வளாகத்தில் மூன்று நாள் கலாச்சார விழாவை நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளன.

இந்த நிகழ்வைப் பற்றி கருத்து வெளியிட்ட தேசிய ரமழான் விழாக் குழுவின் தலைவர் ரிசான் நசீர், மற்றும் அமான் அஷ்ரப்,
இலங்கையின் கலாச்சார பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் மற்றொரு பண்டிகையாக ‘சலாம் ரமலான்’ விழாவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேல் மாகாண சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘சலாம் ரமலான்’ விழா, முஸ்லிம் மக்களின் பல்வேறு பாரம்பரிய மற்றும் கலாச்சார விழுமியங்கள் பற்றிய அடிப்படை புரிதலையும் அறிவையும் மேம்படுத்தும் ஒரு தனித்துவமான விழாவாகும்.


இந்த விழாவின் மூலம், ஏனைய கலாச்சார விழாக்கள் கொண்டாடப்படுவது போன்ற, முழு சமூகத்தையும் மத ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் ஒன்றிணைத்து, அதிக சமூக பங்கேற்பு, பொருளாதார பங்கேற்பு மற்றும் மதங்களுக்கு இடையிலான புரிதலுடன் கொண்டாட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வைப் பற்றி கருத்து வெளியிட்ட தேசிய ரமழான் விழாக் குழுவின் தலைவர் ரிசான் நசீர், அமான் அஷ்ரப்

ரமலான் மாதம் என்பது வெறுமனே ஒரு மாதம் மட்டுமல்ல, அது எமது பாரம்பரிய கலாச்சார நெறிமுறைகள், உணவு பழக்கவழக்கங்கள் பற்றிய பல விஷயங்கள் உள்ளடங்கியுள்ள மையினால், இதை நாம் சமூகத்தின் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும், உலகெங்கிலும் வாழும் Moors,Memons, Malays மற்றும் Dawoodi Bohras போன்ற முஸ்லிம் கலாச்சாரங்கள் தொடர்பான பல விஷயங்களைப் பற்றிய அறிவை சமூகத்திற்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்று சுட்டிக்காட்டினார்.

இந் நிகழ்வு பற்றி அமான் அஷ்ரப் தகவல் தருகையில்

கொழும்பில் முஸ்லிம் இனத்திற்குள் 4 சமூகத்தினர் வாழ்கின்றனர் அவர்கள் உணவு,உடை கலாச்சார விழுமியங்களை ஏனையோரும் அறிந்து ேதசிய ஐக்கியத்தை வளர்த்தெடுப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் ஆலோசனையின் பேரிலும் மற்றும் மேல்மாகாண ஆளுனர் ஊடாக அமைக்கப்பட்ட இக் குழு இந்நிகழ்வினை கொழும்பில் நடத்துகின்றது. எதிர்காலத்தில் சகல இனங்களையும் இணைத்துக் கொண்டு தேசிய வைபவம் இந் நிகழ்வு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அமான் அஷ்ரப் தெரிவித்தார்


மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபும் மற்றும் முஸ்லிம், மலே, போர, மேம்மன் சமூகத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் . இவ் ஊடக மாநாடு கொழும்பு சினமன் கிரான் ஹோட்டலில் நடைபெற்றது. அத்துடன் இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அனுசரணையாளர்கள் கலந்து கொண்டனர்

Exit mobile version