News
தோல்வியில் முடிந்த மஹிந்த – ரனில் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் கொழும்பு – விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று இரவு 7 மணிக்கு சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு மூடிய அறைச் சந்திப்பாக அமைந்திருந்தாக கூறப்படுகிறது.இதன் போது ரனில் விக்ரமசிங்க ராஜபக்ஷவின் ஆதரவை தனக்கு வழங்குமாறு கோரிய போது கட்சி தீர்மானத்திற்கு மேல் தனக்கு எதுவும் செய்யமுடியாது என மஹிந்த ராஜபக்ஷ மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.