News
மஹ்தி ஹசனின் பேட்டிக்கு பின்னரா அனுர குமார திஸாநாயக்கவுக்கு படலந்த நினைவுக்கு வந்தது ?

தங்களது கட்சி உறுப்பினர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக ஜே வி பி யினர் கூறும் படலந்த தொடர்பில் மஹ்தி ஹசனின் பேட்டிக்கு பின்னரா அனுர குமார திஸாநாயக்கவுக்கு படலந்த நினைவுக்கு வந்தது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசில் ரனில் விக்ரமசிங்கவோடு இணைந்து ஆட்சி செய்த போது அனுர குமார பிமல் ரத்னாயக குழுவிற்கு படலந்தை கொமிஷன் நினைவுக்கு வரவில்லையா என அவர் கேள்வி எழுப்பினார்.
88/89 காலத்தில் ஜே வி பி அரச வங்கிகளில் கொள்ளையடித்த பணத்தையும் அவர்கள் செய்த கொலைகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த குறிப்பிட்டார்.

