News
அக்குரனை பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் களமிறங்கும் இஸ்திஹார் இமாதுதீன்

மே மாதம் முதல் வாரம் இடம்பெற உள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அக்குரனை பிரதேச சபைக்குக்கு முன்னாள் அக்குரனை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் களமிறங்க உள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பான கலந்துரையாடல் இன்று மாலை இடம்பெற்றதாக கூறப்பட்டது.
கடந்த பொதுத்தேர்தலில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் மற்றும் அக்குரனை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் கூட்டணி உதைபந்து சின்னத்தில் களமிறங்கியிருந்த நிலையில் இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள்
சக்தியில் இஸ்திஹார் இமாதுதீன் களமிறங்க உள்ளதாக கூறப்பட்டது.

