News
1988, 89 களில் நாட்டில் இருந்த ஏனைய சட்டவிரோத கும்பல்கள், குழுக்கள் தொடர்பிலும் அரசாங்கம் கட்டாயம் விசாரணை நடத்த வேண்டும் ; மைத்திரிபால

1988, 89 களில் நாட்டில் இருந்த ஏனைய சட்டவிரோத கும்பல்கள், குழுக்கள் பல்வேறு குற்றங்களை இழைத்திருந்தமையால், அவற்றையும் அரசாங்கம் விசாரணைக்கு உட்படுத்துவது முக்கியம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமது ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட ஏனைய ஆணைக்குழுக்கள் உள்ளதாகவும், அந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய வங்கி பண மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு இலங்கை நிறுவனம் தொடர்பான உண்மைகளை ஆராய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை நடைமுறைப்படுத்துவது நல்லது எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

