News
வேகமாக சென்ற கார் சுவரில் மோதியதில் இளம் காப்புறுதி அதிகாரி உயிரிழப்பு.

தனது வருங்கால மனைவியை சந்திக்க வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்த இளம் காப்புறுதி அதிகாரி ஒருவர், சுவரில் மோதி உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பாணந்துறை, அலுபோமுல்லவைச் சேர்ந்த 22 வயது டி.ஏ. பசிந்து ஆவார்.
பாணந்துறை ககுல விகாரைக்கு அருகில் சுவரில் மோதியதில், இறந்த இளைஞர் பாணந்துறை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இறந்த இளைஞரின் காரில் பாதுகாப்பு ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டிருந்தாலும், ஓட்டுநர் இருக்கையில் சீட் பெல்ட் அணியாததால் அவர் பலத்த காயமடைந்ததாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

