சவூதி அரேபிய – ரியாத் வாழ் அக்குறணை சமூகத்தின் ஒன்று கூடல்

சவூதி அரேபிய – ரியாத் வாழ் அக்குறணை சமூகம், கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்த அஷ்-ஷெய்க் அப்துல்லாஹ் உவைஸ் (மீஸானி) அவர்களை கௌரவிக்கும் பொருட்டு இப்தார் ஒன்றுகூடல் மற்றும் பாராட்டு விழாவை மார்ச் 15, 2025 அன்று மிக விமர்சையாக நடத்தியது.
அஷ்-ஷெய்க் அப்துல்லாஹ் உவைஸ் அவர்கள், தமிழ் மொழியில் அல் குர்ஆன் விளக்கவுரைகள் மற்றும் அவற்றின் முறைமைகள் – விமர்சன பகுப்பாய்வு என்ற தலைப்பில் மன்னர் சஊத் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தை முதற் தரத்தில் பெற்றுக் கொண்டமை சிறப்பு மிக்கது.
பாராட்டு விழாவின் சிறப்பு அம்சமாக அஷ்-ஷெய்க் அப்துல்லாஹ் உவைஸ் அவர்களின் சிறு பிராயம், கல்வி மற்றும் சன்மார்க்க அடைவுகள், குடும்ப வாழ்க்கை பற்றிய ஒளி ஆவணப்படம் காட்சிப் படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், கலாநிதி அவர்களுக்கு ரியாத் வாழ் அக்குறணை சமூகம் சார்பாக நினைவுச் சின்னம் வழங்கியமை முக்கிய அம்சமாகும்.
நிகழ்வில், ரியாத் வாழ் அக்குறணை சமூகம் (ACR) தங்களுக்கிடையில் உறவுகளை பலப்படுத்துவது, ஊருக்கான எமது பங்களிப்புக்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற தொனியில் கலந்துரையாடலும் இடம் பெற்றது.
சிறுவர் நிகழ்ச்சிகள் மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய செயற்பாடுகள் நிகழ்வை மென்மேலும் மெருகூட்டியது.
Akurana Community Riyadh proudly organized an Ifthar gathering and a felicitation ceremony in honor of Dr. Ash-Sheikh Abdullah Uwais (Meezani) for the successful completion of his PhD on the topic:
“Al-Qur’an Commentaries in Tamil Language and Their Methodologies – A Descriptive and Critical Analysis”
This prestigious degree was awarded by King Saud University, Riyadh, Saudi Arabia, on March 15.
Dr. Ash-Sheikh Abdullah Uwais was honored with a memento and a gift by the community as a token of appreciation for his remarkable achievement.
As part of the celebration, a special video showcasing his life timeline was produced and played, highlighting his journey, dedication, and contributions to the field.
The gathering also featured a panel discussion on the topic:
“What and How ACR Can Contribute to Akurana”, where insightful ideas were shared on ways to uplift and support the community.
Additionally, the event included various engaging activities for children, making it a memorable and enriching experience for all attendees.
Bushra Siddeeque Zahir




