News

இன்று அதிகாலை மனைவியை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடிய கணவன் பொலிஸாரால் கைது #மாத்தளை மாவட்டம்

மாத்தளை – இரத்தோட்டை, கைகாவல இசுருகம பகுதியில் கணவன் தனது மனைவியை வெட்டிக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (22) அதிகாலை 5.00 மணியளவில் இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட மனைவி மற்றும் கொலையைச் செய்ததாகக் கூறப்படும் கணவர் இருவரும் மாத்தளை வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுக்கு இரு பிள்ளைகள் (மகள் 11 – மகன் 13) இருப்பதாக தெரியவந்துள்ளது.

கொலைக்குப் பிறகு மறைந்திருந்த சந்தேகநபரான கணவர், இரத்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button