News

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக உறுப்பினர் தாஹா முஸம்மில் இன்று அதிகாலை கொழும்பில் காலமானார்.

சிரேஷ்ட ஊடகவியலாரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும்,  முன்னாள் பொதுச் செயலாளருமான தாஹா முஸம்மில் இன்று (மார்ச் 24) திங்கட்கிழமை அதிகாலை காலமானார்.


_இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்._

அன்னாரது ஜனாஸா இராஜகிரிய, ஒபேசேகரபுர,  நாணயக்கார மாவத்தையிலுள்ள 163/1 என்ற இல்லத்தில் வைக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் இன்று  மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றது.

தகவல்  கலாபூஷணம் பரீட் இக்பால்
(செயற்குழு உறுப்பினர் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்)

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button