News
ஹஷான் திலகரத்னவும், அப்சாரி சிங்கபாகு திலகரத்னவும் சஜித் பிரேமதாசவின் கட்சியில் இணைந்தனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் திங்கட்கிழமை (05) இணைந்து கொண்டார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்களாகவும் தற்போது அவர் கடமையாற்றி வருகிறார். அவரது மனைவியும் , இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏற்பாட்டாளராகவும் கடமையாற்றி வரும் திருமதி அப்சாரி சிங்கபாகு திலகரத்னவும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.